வீட்டில் ஈரப்பதன் பேணல்
(Humidity Maintenance)
- வேலா சுப்ரமணியம்
குளிர் காலத்தில் வீட்டில் இருக்கவேண்டிய ஈரப்பதனின் அளவு குறைவாகக் காணப்படுவதும், அதே வேளை கோடை காலத்தில் ஈரப்பதனின் அளவு அதிகரித்துக் காணப்படுவதும் இயல்பானது. எனவே காலத்திற்கேற்றவாறு ஒரு வீட்டிற்குத் தேவையான உத்தம அளவிலான ஈரப்பதனைப் பேணுவதிலேயே ஒரு சிறந்த வீட்டுப் பராமரிப்பின் வெற்றி தங்கியுள்ளது.
குளிர் காலத்தில் வீட்டில் இருக்கவேண்டிய ஈரப்பதனின் அளவு 30%-க்குக் குறையும் பட்சத்தில் வீட்டில் பாரியளவிலான பாதிப்புகள் எற்பட வாய்ப்புள்ளது. தளத்திற்குப் போடப்பட்டுள்ள hardwood-இல் சுருக்கங்கள் ஏற்பட்டு இடைவெளிகள் அதிகரிப்பது மட்டுமல்லாது அவற்றில் வெடிப்புகளும் ஏற்படும். அது மட்டுமன்றி வீட்டிலுள்ள தளபாடங்கள், குசினி அலுமாரிகள், base board, dry wall, இதரப் பொருத்துகள் என்பவற்றிலும் வெடிப்புகள் ஏற்படும். சுவாசம், தோல் சம்பந்தமான வியாதிகள் எற்படவும் வாய்ப்புள்ளது. எனவே ஈரப்பதனை உயர்த்த நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமாகும்.
இங்கே தரப்படும் படங்கள் குளிர்காலப் பகுதியில் ஈரப்பதன் குறைந்ததன் காரணமாக வீடுகளில் ஏற்பட்ட பாதகமான விளைவுகளை நன்கு விளக்குகின்றன.
Humidifier பராமரிப்பு:
காலநிலைக்கேற்றவாறு Humidifier-இன் தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் அதனைப் பயன்படுத்துவது கூடிய பலன் தரும். கோடை காலத்தில் இதனை முற்றாக நிறுத்திவிடவேண்டும். வருடம் ஒரு முறையாவது Filter-ஐ துப்பரவு செய்ய வேண்டும். தண்ணீரிலுள்ள கல்சியப் படிவுகள் அதிகரித்துத் துவாரங்கள் அடைத்து விடுவதால் வெளியேற வேண்டிய தண்ணீர் வழி தெரியாது, அது பொருத்தப்பட்டிருக்கும் இடமெல்லாம் கசிந்து, பின்னர் அந்தப் பகுதி முழுவதும் கறள் ஏறி இருப்பதைப் பழைய வீடுகளில் கண்கூடாகப் பார்க்கலாம். அதிகமான வீடுகளில் இவை இயங்காத நிலையிலேயே உள்ளன. பலரும் இதில் ஒரு Evaporator pad இருப்பதைக் கண்டுகொள்வதில்லை. வருடா வருடம் கிரமமாக இதனைச் சுத்திகரிப்பதும் மேலதிக தண்ணீர் இலகுவாக வெளியேறுகிறதா என்று பார்த்துக்கொள்வதும் மிக முக்கியமாகும். Evaporator pad-ஐக் கழற்றிச் சுத்தம் செய்வது மிகவும் இலகுவானது. அதுபற்றி நினைத்துப் பயந்துகொள்ளவேண்டிய அவசியம் கிடையாது.
வீட்டின் தன்மை, எமது பழக்க வழக்கங்கள், உள்ளக வெளிப்புறக் காரணங்கள், பல வீட்டிலிருக்கக் கூடிய ஈரப்பதனின் அளவைத் தீர்மானிக்கின்றது. பல மணித்தியாலங்கள் சமைக்கும் எங்கள் சமையல், நீராவி மூலம் வீட்டிற்குள் அதிகளவு ஈரப்பதனை உருவாக்குகின்றது. பலமணி நேரம் வெந்நீரில் குளிப்பதிலுள்ள சுகம் மறுபுறத்தில் வீட்டிற்குள் அதிகளவு ஈரப்பதனையும் உருவாக்குகின்றது. கூட்டுக் குடும்பங்களாகப் பலர் வீட்டில் வசிக்கும் சந்தர்ப்பத்தில் இயற்கையாகவே ஈரப்பதன் அதிகரிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
அதிகரித்த ஈரப்பதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
வெளியிலுள்ள உஸ்ண நிலைக்கு ஏற்றவாறு Humidistat-இன் அளவைச் சரிபார்த்துக்கொள்ளல் வேண்டும்.
யன்னல் கண்ணாடிகளை அவதானித்து நீர்ப்படிவு இருந்தால் அதனைத் துணியால் துடைத்தெடுத்து விட்டு Humidistat-ஐக் குறைத்து விடல் அல்லது நிறுத்தி விடல் வேண்டும்.
தற்போதயப் புதிய வீடுகளில் Attic Fan அல்லது Ventilator எனப் பெயர் குறிப்பிடப்பட்ட Switch ஒன்று thermostat controller-க்கு மேலாகப் பொருத்தப்பட்டிருக்கும். பொதுவாக இது ஒரு குளியலறைக்குரிய Fan-க் கட்டுப்படுத்தும் இரட்டை வழி Switch-ஆக இருக்கும். இதனை நீண்ட நேரம் போட்டு விடுவதும் மேலதிக ஈரப்பதனை வெளியேற்ற உதவும். முக்கியமாகக் குறிப்பிட்ட குளியலறைக்குரிய கதவுகளைத் திறந்து விட்டு அத்துடன் Furnace-க்குரிய Fan-ஐ auto-விலிருந்து ON-க்கு மாற்றி விடல் எதிர்பார்க்கும் பலனைப் பன்மடங்காக்க வழி வகுக்கும்.
குளியலறையிலிருக்கும் Fan, குளித்து முடிந்தபின் குறைந்தது 15 நிமிடங்களாவது இயக்கப்பட வேண்டும். ஈரப்பதன் முற்றாக அகற்றப்படும் வரை தானே இயங்கித், தாமாகவே நிறுத்திக்கொள்ளும் Fan-களும் switch-களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் கவனத்திற் கொள்ளவும்.
சமையலறையிலிருக்கும் Over hood Fan முறையாகப் பாவிக்கப்பட வேண்டும். சமையல் தொடங்குவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவும், சமையல் முடிந்தபின் குறைந்தது 15 நிமிடங்களாவது இந்த Fan இயக்கப்பட வேண்டும். ஈரப்பதனைக் கண்டதும் தானே இயங்கித், தாமாகவே நிறுத்திக்கொள்ளும் Over hood Fan-களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் கவனத்திற் கொள்ளவும்.
n கழுவப்பட்ட உடுப்புகளைக் கொடியிலோ அல்லது வேறு முறைகளிலோ வீட்டிற்குள் உலர்த்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
n துணி உலர்த்தும் இயந்திரத்திலுள்ள vent duct முறையாக இணைக்கப்பட்டிருப்பதும், அடைப்புகள் இல்லாது இருப்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
n அதிகளவிலான மரங்களோ அல்லது பூச்செடிகளோ வீட்டிற்குள் வளர்க்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
n வீடு சுத்தமாக வைத்திருக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால், விரதம் என்ற பெயரில் அடிக்கடி MOP செய்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.
n கதவுகளுக்குரிய weather stripes கசிவைத் தடுக்கும் நிலையில் உள்ளனவா என்பதும், யன்னல்கள் முறையாக Caulking செய்யப்பட்டு கசிவைத் தடுக்கும் நிலையில் உள்ளனவா என்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
வீட்டிற்குரிய insulation சரியாக இல்லாத பட்சத்தில் அதிகளவு ஈரப்பதன் பாரதூரமான பாதக விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக Attic insulation குறைவாக இருந்தால் Ceiling மூலைகளில் அதிகளவு ஈரப்பதன் காரணமாக ஏற்படும் நீர்ப்படிமம் mold-ஆக மாறுவதைக் காணலாம்.
சிலர் யன்னல்களைச் சிறிதளவு காற்றோட்டம் வருமளவுக்குத் திறந்துவிட்டுச் சமப்படுத்துவார்கள். அதிகளவு திறந்து விட்டால் குளிர்கூடி வெப்பமாக்கும் செலவும் அதிகமாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வீட்டில் ஏதாவது கொண்டாட்டம் நடைபெறும் சந்தர்ப்பத்தில் humidifier-ஐ நிறுத்திவிட வேண்டியது அவசியம். மேலதிக சமையல், பலரது பிரசன்னம் அதிகளவு ஈரப்பதனை உருவாக்கும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு Hygrometer வைத்திருக்க வேண்டியது மிக அவசியமானது. அத்துடன் ஈரப்பதன் அளவு 40% - 60% வரை இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஈரப்பதன் அளவு 50%-ஆக இருப்பது உத்தமம்.
அதிகமாகவுள்ள ஈரப்பதனை அகற்ற Di-humidifier பாவிக்கப்பட வேண்டும்.
